
கரூரில் நடந்த சம்பவம் தமிழகத்தையே பெரும் துயரத்தில் ஆழ்த்தி உள்ளது, விஜய்யின் பரப்புரை கூட்ட நெரிசலில் சிக்கி 10 குழந்தைக 17 பெண்கள் உட்பட 40 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 34 பேரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. அதில் பெரும்பாலானோர் கரூர் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் உயிரிழந்துள்ளனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த தாய் குழந்தைகள் என் மூவர் உயிரிழந்துள்ளனர் மேலும் 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் உயிரிழந்துள்ளது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த சூழலில்தான் துணை முதல்வர் மு.க.ஸ்டாலின் கரூர் விரைந்தார், அங்கு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசுகையில்,
“அரசு முழு பாதுகாப்பு கொடுத்திருந்த போதிலும் அசம்பாவிதம் ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தினால் மிகுந்த மன வேதனை அடைந்த முதலமைச்சர் நேற்று இரவே பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
இன்னும் 2 மணி நேரத்தில் உயிரிழந்த அனைத்து உடல்களும் உடற்கூறாய்வு பரிசோதனை முடித்து உறவினர்களிடம் ஒப்படைக்கபடும்.
இந்த இழப்பிற்கு ஆறுதலே கிடையாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு எப்போதும் துணை நிற்கும். சிகிச்சையில் உள்ளவர்களுடைய சிகிச்சை விவரங்களை மருத்துவர்களிடம் தனித்தனியாக விரிவாக கேட்டறிந்துள்ளேன்.
மருத்துவர்கள் முழு வீச்சில் சிகிச்சை அளித்து வருகின்றனர். 345 மருத்துவர்கள் பணியில் உள்ளனர்.கரூர் மாவட்ட ஆட்சியருடன், திண்டுக்கல் மற்றும் திருச்சி மாவட்ட ஆட்சியர்கள் இணைந்து பணியாற்றி வருகின்றனர்.
இந்த இழப்பு மேற்கொண்டு அதிகரிக்காத வகைகள் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இனி இதுபோன்ற நிகழ்வு நடைபெறாத வகையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்.
இந்த அசம்பாவத்திற்கான காரணங்களை பொறுப்பு டிஜிபி விளக்கமாக தெரிவித்துள்ளார். இதில் அரசியல் பேச விரும்பவில்லை.
அறிக்கை வந்தவுடன் மக்களுக்கு உண்மை தெரியும். அப்போது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அவர் சரியான நேரத்திற்கு வந்திருக்க வேண்டும். அவரும் வாராவாரம் வந்து உங்களை சந்திக்கிறார், அவரிடமும் 2 கேள்விகளை கேளுங்கள்.
பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்த வேண்டாம், மரத்தின் மீது ஏற வேண்டாம் என பல்வேறு நிபந்தனைகளை விதிக்கிறோம். ஆனால் அவர்களை கட்டுப்படுத்துவது சம்பந்தப்பட்ட இயக்கத்தின் பொறுப்பு.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.